செய்திகள்

ராய்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் ஒடிசா மாநில எல்லையில் உள்ள சிந்த்காடக் கிராமத்துக்கு அருகே வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பெண் நக்சலைட் உள்பட 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

துப்பாக்கி சூட்டில் பலியான மட்கம் விஸ்வநாத், ராகேஷ் ஹெம்லா தலைக்கு முறையே ரூ.8 லட்சம், ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையும், குஞ்சமுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/siHt74G
via IFTTT

Post a Comment

0 Comments