செய்திகள்

சென்னை,

தமிழ்நாட்டில் சமையல் கியாசுக்கு மத்திய அரசு 5 சதவீதம்தான் வரி விதிக்கிறது. ஆனால், மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், ‘சமையல் கியாஸ் ஜி.எஸ்.டி. வரியின் கீழ் வருகிறது. மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாசுக்கு விதிக்கப்படுகிறது. எனவே வதந்திகளை பரப்ப வேண்டாம்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/Uur4iLs
via IFTTT

Post a Comment

0 Comments