செய்திகள்

சென்னை,

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அதர்ஸ்’. மெடிகல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் 'முண்டாசுபட்டி' ராமதாஸ், 'நண்டு' ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 7ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றன. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், தணிக்கை வாரியம் அதர்ஸ் படத்திற்கு "யு/ஏ" சான்றிதழை வழங்கியுள்ளது.



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/4e3mEd8
via IFTTT

Post a Comment

0 Comments