செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எழுத்துத் தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைதியாக, குறைபாடுகள் இன்றி நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர்/சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் எழுத்துத் தேர்வு இன்று (9.11.2025) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள 3 தேர்வு மையங்களில் அமைதியாகவும், எந்த வித குறைபாடுகள் இன்றியும் சிறப்பாக நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் தேர்வு நடத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வினை, மாவட்டத்திற்கான சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளரான சென்னையைச் சேர்ந்த காவல்துறை தலைவர் (Establishment) நரேந்திரன் நாயர் அனைத்து தேர்வு மையங்களிலும் நேரில் சென்று மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வழங்கிய வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின் படி தேர்வு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக அனுமதிக்கப்பட்ட 4,905 விண்ணப்பதாரர்களில் 4,214 பேர் நேரில் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வில் ஆண்கள் 3,905 பேர், பெண்கள் 1,118 பேர், திருநங்கை 1 நபர் என மொத்தம் 4,214 பேர் பங்கேற்றனர். மீதமுள்ள 691 பேர் இந்த தேர்வினை எழுதவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/ZaWn2ep
via IFTTT

Post a Comment

0 Comments