செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கூட்டணி, பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. வயது வித்தியாசமில்லாமல் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கிறது. நம் வீட்டில் அதுபோல ஒரு சம்பவம் நடந்தால் யார் பொறுப்பேற்பது? முதல்-அமைச்சர் பொறுப்பேற்பாரா?

பீகார் தேர்தலில் பிரசாரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று வந்ததின் விளைவாக 243 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக கூட்டணி 202 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாய கூட்டணி 20 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெறும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறப்போவது உறுதி

என்றார்.



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/0QBKxMl
via IFTTT

Post a Comment

0 Comments