செய்திகள்

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த குப்புச்சிபுதூர் பாறைமேடு அருகே ஒரு சிறுத்தை ஒன்று நடமாட்டம் இருப்பதாக சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அருகே ஒரு மாதமாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஒடைய குளம் அருகே அம்மன்கோரை பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த இரும்பு கூண்டில் சிக்கியது. போத்தமடை பகுதியில் கால்நடைகளை அடித்துக்கொலை செய்து வந்த இந்தச் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டிருந்தது. பிடிபட்ட சிறுத்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வனத்திற்குள் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/ikM4qvp
via IFTTT

Post a Comment

0 Comments