செய்திகள்

மும்பை,

மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் மந்தஹி கிராமத்தை சேர்ந்த முதியவர் பாஸ்கர் (வயது 55). இவர் நேற்று முன் தினம் மாலை கிராமத்திற்கு அருகே உள்ள காட்டில் விறகு சேகரிக்க சென்றுள்ளார்.

இந்நிலையில், பாஸ்கர் விறகு சேகரித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த புலி அவரை அடித்துக்கொன்றது. விறகு சேகரிக்க சென்ற பாஸ்கர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வனத்துறையினர் உதவியுடன் காட்டின் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, வனப்பகுதியில் புலி அடித்துக்கொன்ற நிலையில் பாஸ்கரின் உடலை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். . உடல் பாகங்கள் சிலவற்றை புலி சாப்பிட்டுள்ளது. இதையடுத்து பாஸ்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/6ZINqMj
via IFTTT

Post a Comment

0 Comments