செய்திகள்

சென்னை,

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் சமீபத்தில் காந்தா படம் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது, ஐ அம் கேம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சண்டை இயக்குனராக அன்பறிவு, மேலும் நடிகர்களான கதிர், ஆண்டனி வர்கீஸ் பிபி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 28ந் தேதி மாலை 6 பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/ulwp7nC
via IFTTT

Post a Comment

0 Comments