பெங்களூரு,
மைசூரு தாலுகா சிக்கல பீச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 25). இவருக்கும் மைசூரு விஜயநகரை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மகேஷ், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. மேலும் தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க வரும்படி அந்த பெண்ணை மகேஷ் அழைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அதற்கு மறுத்ததுடன் மகேசை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் உனது படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுபற்றி விஜயநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை தேடி வருகிறார்கள்.
from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/Qf4rNZS
via IFTTT
0 Comments