செய்திகள்

நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்கள் கோடிகளில் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றன. இத்துடன், வரலாற்று கதைகளத்துடன் உருவான இப்படங்களுக்கு உலகளவில் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இதையடுத்து, இவ்விரண்டு திரைப்படங்களையும் இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ எனும் முழு நீளப் படத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.

‘பாகுபலி: தி எபிக்’ படம் வெற்றி பெற்ற நிலையில், இத்திரைப்படம் வரும் 12ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ஜப்பான் நாட்டில் திரையிடப்பட்ட ‘பாகுபலி: தி எபிக்’ படத்தின் சிறப்பு காட்சியில் கலந்து கொண்ட நடிகர் பிரபாஸ் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்துள்ளார். இதையடுத்து, ரசிகர்களுடன் பேசிய நடிகர் பிரபாஸ், “ஜப்பான் வந்து உங்கள் அனைவரையும் நேரில் சந்திப்பது எனது கனவு. இனிமேல், ஆண்டுக்கு ஒருமுறை ஜப்பான் வந்து உங்களை சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, ஜப்பானில் ‘கல்கி 2898 ஏடி’ சிறப்பு காட்சியில் பிரபாஸால் கலந்து கொள்ள முடியவில்லை, ஆனால், விரைவில் ரசிகர்களைப் பார்ப்பதாக உறுதியளித்தார். இப்போது அவர் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றி உள்ளார்.

பிரபாஸ் தற்போது பவுஜி படத்தில் நடித்து வருகிறார், மேலும் இந்த மாத இறுதியில் ஸ்பிரிட் படப்பிடிப்பை தொடங்குவார். இதற்கிடையில், பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாகிறது.



from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/miV1CHB
via IFTTT

Post a Comment

0 Comments