சென்னை,
14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) கடந்த 28-ந்தேதி சென்னை மற்றும் மதுரையில் தொடங்கியது. தமிழ்நாட்டில் முதல் முறையாக நடந்த இந்த ஆக்கி தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்று லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் மோதின.
இதன் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி, ஸ்பெயினை வீழ்த்தி 8-வது முறையாக கோப்பையை முத்தமிட்டது. இந்திய அணி 0-2 என்ற சரிவில் இருந்து மீண்டு வந்து அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இந்த தொடரில் வெண்கல பதக்கம் வென்று அசத்திய இந்திய அணிக்கு ஆக்கி இந்தியா அமைப்பு பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/7tF3XcW
via IFTTT
0 Comments