செய்திகள்

தூத்துக்குடி மடத்தூர் முருகேசன்நகர் 16வது தெருவைச் சேர்ந்த பிரிட்டிஷ் மகன் சாந்தகுமார் (வயது 60). இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது ஏறி நின்று கிறிஸ்துமஸ் ஸ்டார் மாட்டிக் கொண்டிருந்தார். இதில் கால் தவறி கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/DrTpmuF
via IFTTT

Post a Comment

0 Comments