செய்திகள்

சென்னை,

கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி இன்று வெளியிட்டிருந்த சமூக வலைத்தளப் பதிவில், “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராஜர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு, காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று ஜோதிமணி தெரிவித்து இருந்தார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ஜோதிமணியின் சமூக வலைத்தளப் பதிவுக்கு, கருத்து தெரிவித்து விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், "பதிவின் கடைசி பத்தியை கூட்டணி அரசியலுக்காக மறந்ததால் தான் இந்த நிலை. 2006-ல் மாநிலத்தில் அமைச்சரவையில் பங்கு பெற இருந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள தவறியது ஒரு உதாரணம்" என்று தெரிவித்து உள்ளார்.

கூட்டணி அரசியலுக்காக தி.மு.க. ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் புகழ்ந்ததையும், காங்கிரஸ் அடிமட்ட தொண்டர்கள் முதல் 2-ம் கட்ட தலைவர்கள் வரையிலான உண்மையான காங்கிரஸ் உணர்வாளர்கள் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. மாணிக்கம் தாகூரின் கருத்தும் இதன் வெளிப்பாட்டை பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.



from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/xwBAqOP
via IFTTT

Post a Comment

0 Comments