கொழும்பு,
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
2வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. மழை காரணமாக 20 ஓவர் போட்டி 12 ஓவராக குறைக்கப்பட்டது.
இப்போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அதிரடியாக ரன்களை குவித்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக தாசுன் ஷனகா 9 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியில் 12 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 160 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது வசீம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 161 என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சல்மான் ஆகா 12 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ரன் அடிக்க தவறினர். இதனால் 12 ஓவர்கள் முடிவில் 8 விகெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் சமனில் முடிவடைந்தது.
from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/MvRP8UL
via IFTTT
0 Comments