செய்திகள்

சென்னை ,

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சுனிதா, எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தன்னுடன் பணிபுரியும் நர்ஸ் நான்சி நிஷா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நான்சி கொடுத்த காளன் சூப்பை சாப்பிட்டதும் சுனிதா மயங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் சுனிதா வீட்டிற்கு சென்று பார்த்ததும் தனது 6 சவரன் தங்க செயின் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரித்ததில், நான்சி நிஷா , சுனிதாவிற்கு காளான் சூப்பில் தூக்க மாத்திரையை கலந்துகொடுத்து தங்க செயினை திருடியது தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். அதேபோல மற்றொரு நர்ஸிடமும் நான்சி கைவரிசை காட்டி கடந்த வாரத்தில் ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.



from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/u5w0eVU
via IFTTT

Post a Comment

0 Comments