செய்திகள்

ஜம்மு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆர்.எஸ். புரா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 2 கைதிகள் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டு இருந்தனர். முகமது சனுலா, அன்வர் ஆகிய அந்த 2 பேரும் மற்றும் இந்தியரான குகா என்ற கரம்ஜீத் என்பவர் என 3 பேர் சேர்ந்து அந்த இடத்தில் இருந்து தப்பியோட முடிவு செய்தனர்.

குகா என்ற அந்த இந்திய நபரே இதற்கான திட்டம் எல்லாவற்றையும் தீட்டிய முக்கிய புள்ளியாக இருந்திருக்கிறார். அந்த 2 பேரையும் உத்தரபிரதேச-நேபாள எல்லை வழியே தப்ப வைக்க உதவிடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி, நேற்று மாலை 3 பேரும் போலீசாரை நோக்கி சுட்டு விட்டு தப்பயோடி உள்ளனர்.

எனினும், உஷாரான போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். இதில், அம்பாலா கன்டோன்மென்ட் ரெயில்வே நிலைய பகுதியில் அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து, அழைத்து வந்தனர். இதனை காவல் துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் பூஷண் உறுதி செய்துள்ளார்.



from dailythanthi https://ift.tt/6EfcGuS
via IFTTT

Post a Comment

0 Comments