செய்திகள்

சென்னை,

சுமார் 5.8 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

லேசான மழை

இதன் காரணமாக இன்று (19-07-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

21 மாவட்டங்களில் மழை

இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், பெரம்பலூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, மதுரை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, தென்காசி, நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from dailythanthi https://ift.tt/dEr80qo
via IFTTT

Post a Comment

0 Comments