செய்திகள்

சென்னை,

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 இளைஞர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் (WorldSkills Shanghai 2026) இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்று, ‘Dental Prosthetics’ திறன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முகம்மது சலாம் அவர்களுக்கும், பல்வேறு திறன் பிரிவுகளில் சிறப்புப் பதக்கங்களை (Medal for Excellence) வென்ற ராகுல், அர்ஜுன், சுரேந்திரன், ஜாய் தாஸ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற, தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்களில் 5 போட்டியாளர்கள் சிறப்பான சாதனைகளைப் படைத்து பெருமை சேர்த்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறன்மிக்க இளைஞர்களுடன் போட்டியிட்டு சாதனை படைத்திருப்பது, தமிழ்நாட்டு இளைஞர்களிடம் நிறைந்துள்ள மேம்பட்ட திறமைக்கும், தொழில்நுட்ப அறிவுக்கும் சிறந்த சான்றாகத் திகழ்வதுடன், திறன் சார்ந்த துறைகளில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்தியாவின் சார்பில் உலக அரங்கில் தமிழ்நாட்டின் திறனையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள இவ்வெற்றியாளர்கள் உலக அரங்கில் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



from dailythanthi https://ift.tt/8Rxv5DJ
via IFTTT

Post a Comment

0 Comments