சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்டிரலில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 27-ந் தேதி மற்றும் செப்டம்பர் 3, 10 ஆகிய தேதிகளில் கொல்லத்திற்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-06119) இயக்கப்படுகிறது. அதே போல, கொல்லத்தில் இருந்து வருகிற 28-ந் தேதி மற்றும் செப்டம்பர் 4, 11 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06120) இயக்கப்படுகிறது.
மங்களூருவில் இருந்து வருகிற 21, 23, 28, 30 மற்றும் செப்டம்பர் 4, 6, 11, 13 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில் (06041) இயக்கப்படுகிறது. அதே போல, திருவனந்தபுரத்தில் இருந்து 22, 24, 29, 31 மற்றும் செப்டம்பர் 5, 7, 12, 14 ஆகிய தேதிகளில் மங்களூருவிற்கு சிறப்பு ரெயில் (06042) இயக்கப்படுகிறது.
மங்களூருவில் இருந்து வருகிற 25 மற்றும் செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06047) இயக்கப்படுகிறது. அதே போல, கொல்லத்தில் இருந்து 26 மற்றும் செப்டம்பர் 2, 9 ஆகிய தேதிகளில் மங்களூருவிற்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06048) இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/elPsHWg
via IFTTT
0 Comments