சமூகம்.


சமூகச் சந்தையில்
அமுதும்
காலடியில் !    

சில்லறைகளிடம்  சிக்கி

சில்லறையானது

நாணயம்!

                                                 எல்லாக் கருப்பும்

வெள்ளுடையில்

வெளியே!

                                                பெண்மையை

மதியா

ஆண் வர்க்கம்!

 

வியாபார வரிசையில்

அரசியல்

முதலிடம் !

                                                உழைப்பவனுக்கு இல்லை

உருப்படியான

சன்மானம்!

 

நீதிதேவதையின்

பார்வை

நிதியின் மேல்!

                                                மெய்யை

பொய் வெல்லும்

சமூகம்!

                                                அல்லன இருப்பினும்

சமூகமோர்

நந்தவனம்!

 

மனிதநேயம்

மலர்ந்து

கொண்டே இருப்பதால்!

 

இல்லாதோர்க்கு

ஈந்து மகிழ்வோர்

இருப்பதால்!

 

உயிர் காக்கும்

நோக்கம்

உயர்ந்திருப்பதால்!

 

சத்தான சமூகச்செடி

முளைக்க

  

அறமெனும் வித்துகளை

அதிகமாக

விதைத்து வைப்போம்.













வினையாலணையும் உயிர்கள்.

 




அரிதாம் மானிடப் பிறவி
ஒளவை பகன்ற
அரிய மொழி.

அதை
எளிதாய் இழக்கும்
இளையோருக்கு
இயம்புகின்றேன்
நல்மொழி.

நன்றாய்
உறங்கி எழுதல்
நற்பழக்கம்.

குன்றாத
வளம் கொடுக்கும்
நல் உறக்கம்.


இன்றோ
உறக்கம் தொலைத்து
விழித்தே திண்டாடி
தேகம் தொலைக்கும்
தோழர்கள்.



அலைபேசியில் அலைந்து
புலனத்தில் புகுந்து
முகநூலில் மூழ்கி
படவரியில் படர்ந்து
காணொளியில் கலந்து
வெளியேற முடியாமல்
இளமையை இழக்கும்
இளையோர்களே!

வேகம் விவேகமல்ல
எனத் தெரிந்தும்
விலை உயர்ந்த வாகனத்தில்
வேகமாய்ச் சென்று
எம வாகனமேறும்
எம்மிளம் பிஞ்சுகளே!

இதயங்கள் பரிமாறும்

இலவச எண்ணங்களால்
இதயங்களை இழக்கும்

என்னருமை செல்வங்களே!

காதல் என்பது காலத்தே வருவது
அதை மோதலில்லா முடிவில்

முகர்வதே நல்லது!


ஈரைந்து மாதங்கள்
சுமந்து
ஈன்றெடுத்த
ஈருயிர்கள்
கட்டிய
இன்பத் தேன்கூட்டை
சிறுவயதிலே
சீரழித்தல்

சிந்தனைக்கு ஏற்றமோ?

ஈசல் போல்
இன்னுயிரை
ஒரு நாளில் இழத்தல்

தகுமோ?

ஆன்றோரும் ஈன்றோரும்

அருளும் சொற்படி
அளவோடு இயங்கு
அறிவோடு இயங்கு.


அணை கட்டி,
வினையாலணையும்
உயிர்களை
விவேகமாகக் காப்போம்.

 

 




நூலகம் செல்

அமைதியின் சூழலில்

மனம் ஆனந்தம் அடையுமே!

நூலகம் செல்

அறிவுப் பசிக்கு

அருந்தலாம் அருமருந்து

நூலகம் செல்

அறியாமை இருளகற்றும்

அற்புத விளக்குகள்

அலமாரிகளில்

அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

நூலகம் செல்

தத்தளிக்கும் நாவாய்க்கு

தரைகாட்டும் கலங்கரை விளக்காய் வாழ்க்கைக்கு வழி காட்டும்.

நூலகம் செல்

அங்கே மௌனமொழியில்

புத்தகங்கள்  உன் மனதோடு பேசும்.

நூலகம் செல்  உன் மூளையின்

பெரும்பகுதி பிரயோகிக்கப்படும்.


நூலகம் செல்

அண்ணல் உனக்கு  அகிம்சை போதிப்பார்.

நூலகம் செல்

கலாம் உன்னோடு கைகோர்ப்பார்

நூலகம் செல்

பாரதியும் தாசனும்

பாட்டு வித்தைகளைப்

பாங்காய் சொல்லித் தருவார்கள் .

நூலகம் செல்

கவிஞர்கள் உன்னோடு  கைகுலுக்குவார்கள்.

நூலகம் செல்

நற்பண்புகள் நாடி வந்து  ஒட்டிக் கொள்ளும்.

நூலகம் செல் 

ஆன்றோர் பெருமக்கள்

உனக்காகப் புத்தகங்களில்

தன் பொக்கிசங்களை

கொட்டி வைத்திருக்கிறார்கள்.

நூலகம் சென்று நூல்களில்

தலை குனிந்தால்

உன் வாழ்வு தலைநிமிரும்.

ஆலயம் செல்வது சாலவும் நன்று

அதனினும் நன்று

நூலகம் செல்வது





 

தேசியப் பறவையே

தேவதையின் வடிவமே!

அழகன் முருகனின்

அன்பான வாகனமே!

தோகை விரித்தாடும்

தோற்றப் பொலிவே!

புலரும்  பொழுதில்

பேடையுடன் காதலா?

வருணனை வரவேற்கும்

அலங்கார வளைவே!

நந்தவனப் பூக்கள் எல்லாம்

உன் வண்ணங்களை அல்லவா
வரமாய்க் கேட்கிறது!

நீ மட்டுமா எங்களைக்

கொள்ளை கொண்டாய்?
16
வயதினிலே எனும்

திரையில் வந்த

மயிலும்

மனம் கவர்ந்தவளே!

கவிஞர்களுக்கு எல்லாம்

கற்பனைப் பொருள்

நீதானே!

உங்கள் அகவலோசை

எங்கள் அகங்களில் அல்லவா

கீதம் இசைக்கிறது!

உன் இறகுகளைப்

புத்தகத்தில் வைத்து

குட்டி போடும் என்று

 நினைத்த பிரம்மாக்கள்!

மயிலிறகின் மென்மை

மருந்திடும் போது

தெரியுமே!

கருமேகக் காதலனுக்கு

மட்டும் உன் வனப்பை

வசீகரமாய்க் காட்டுகிறாய்!

நீ தேசியப் பறவை தான்

தேசமெல்லாம் உன் அழகில்

அல்லவா மயங்கிக் கிடக்கிறது.

 






15.05.2024
மௌனம் 



14.05.2024
 தாத்தாவின் ஆத்திச்சூடி



தாத்தா தாத்தா கதை சொல்லு
தங்கத் தமிழில் கதை சொல்லு

பாப்பா பாப்பா கதை கேளு
பாட்டாய் பாடறேன் கதை கேளு.

அன்பாய் நீயும் இருக்கவே
ஆத்திச்சூடி சொல் கேளு.

இன்பமாய் உலகில் நிலைக்கவே
ஈந்து மகிழ்ந்து உறவாடு.

உண்மை பேசும் மொழியோடு
ஊராரோடு ஒன்றி விடு.

என்றும் இருப்பாய் பண்போடு
ஏற்றம் தருமே பொறுப்போடு.

ஐயமின்றி அறிந்து விடு

ஒழுங்காய் நீயும் படித்து விடு
ஓங்கி வாழலாம் உலகோடு.

ஔடதம் இன்றிக் காத்திடவே
அஃதே வழியாம் யாக்கைக்கு.



13.05.2024
தேயத் துவங்கும் நிலவு



தேயத் துவங்கும் நிலவு 
வளர்வதற்கே.

பாயத் துவங்கும் 
ஆறு போலவே.

இடமாறு தோற்றத்தில் 
இடர்பாடு அன்றி 
இயற்கையில் எந்த 
மாறுபாடும் இல்லை.

மனிதநேயம் தேய்வது போல் 
இருந்தாலும் தேயவில்லை

அறத்தின் வழியே 
நடக்காதோர் யாருமில்லை.

இரக்க குணம் 
ஊற்றெடுக்காமல் இருந்ததில்லை.

நன்றி நவிழல் 
நடைபெறாமல் இருந்ததில்லை.

உதவி புரியாமல் 
ஒருவரும் இருப்பதில்லை.

தர்மம் தலை காக்கும் 
நம்பாதோர் நாட்டிலில்லை.

இறைஞானம் இல்லாதோர் 
ஞாலத்தில் இல்லை.

மலர்கள் பறிக்கப்படுகிறது என்று 
மலராமல் இருப்பதில்லை.

மான்கள் கொல்லப்படுகிறது என்று 
புலிகள் 
புசிக்காமல் இருப்பதில்லை.

குறைகள் சிலது இருந்தாலும் 
நிறைகளே 
நீக்கமற நிறைந்துள்ளது.

வளர்சிதை மாற்றத்தின் 
வளர்ச்சியே 
தேயத் துவங்கும் நிலவும்.





12.05.2024



அன்னையர் தினம் அனுசரிப்போம் அனுதினம்.

அகம் நிறைத்தாய் 
ஆசை துறந்தாய் 
இன்னமுது ஈந்தாய் 
ஈரைந்து மாதம் சுமந்தாய் 
உயிர் தந்தாய் 
ஊண் தந்தாய் 
எம்மை ஈந்தாய் 
ஏமத்திலும் காத்தாய்
 ஐயமின்றி அரவணைத்தாய் 
ஒன்றி வளர்த்தாய் 
ஓயாது உழைத்தாய் 
ஔடதமருந்திக் காத்தாய் 
அஃதே அகிலத்தின் தாய். 



 அன்னையர் தினம் அனுசரிப்போம் அனுதினம். 



 கருவறை தந்து காத்த தெய்வமே! 
உருவாக்கி உலகிற் கீந்தும் ஓவியமே!
வயிற்றுப் பெட்டகத்தில் வளர்த்திட்ட அஞ்சுகமே! 
வாயைக் கட்டி சேய்காத்த செண்பகமே! 

 வலிதாங்கி வழிதந்து உயிர்வளி தந்தாய்! 
விழிகாக்கும் இமைபோல் எமைக் காத்தாய்! 
நனைந்த படுக்கையில் நீங்கியது நித்திரை! 
நனைத்த படுக்கையே உனக்கு முத்திரை! 

என் மூக்கு சளிக்கு 
நீ மூச்சு பிடித்தாய்! 

என் உடல் கனப்புக்கு 
நீ கசாயம் குடித்தாய்! 

என் சிரிப்பினால் 
நீ சொர்க்கம் பார்த்தாய்! 

தவழும் போது 
நந்தவனம் 
நகர்ந்ததாய் 
நாடெங்கும் அறிவித்தாய்! 

 நான் நடைபழகும் போது 
நீ விண்ணில் பறந்தாய்! 

என்னைக் கொஞ்சும் போது 
நீ மண்ணில் மிதந்தாய்! 

மழலையில் மகிழும் போது 
மொழியில் முதுகலை பட்டம் 
பெற்றதாய் மகிழ்ந்தாய்! 

சிறுகை அளாவிய கூழ் 
அமிழ்தென சிறப்பித்தாய்!
 
ஆடை அணிகலன் போட்டு 
அழகு பார்த்தாய்! 

உன் இதழ்களால் எனக்கு 
முத்தமழை பொழிந்தாய்! 

சொர்க்கம் பக்கத்தில் இருப்பதாய் 
சொந்தம் கொண்டாடி மகிழ்ந்தாய்!

மொத்தத்தில் உன் 
சித்தம் மாறியது 
நான் உன் 
முழு சொத்தாய்!

 என்றும் அன்னையின் நினைவில்...
அந்தியூர் மைந்தன் மா.செங்கோடன். 

செவிலியர் தின நல்வாழ்த்துகள்.


 செவிலியர் எல்லாம் அன்னையரே 
அன்னையர் எல்லாம் செவிலியரே 
 அன்னையர் தினமும் செவிலியர் தினமும் 
அலங்கரிக்கும் தினம் ஒன்றே. 
ஆராதிப்போம் அதை இன்றே. 

அனைவருக்கும் அன்னையர் தினம் மற்றும் செவிலியர் தின நல்வாழ்த்துகள்.

 அந்தியூர் மைந்தன் மா.செங்கோடன்

Post a Comment

4 Comments

  1. காதல் மவுனம் கரையைக் கடந்திட
    சாதல் அகன்றிடும் சற்று.!

    *குறட்பா*

    பெருவை பார்த்தசாரதி

    பெருவை பார்த்தசாரதி

    ReplyDelete
  2. செவிலியர்

    தன்னை லமிலாத தாயின் செயல்போல
    தன்னுதவி ஈயும் தகவு!

    *குறட்பா*

    பெருவை கி.பார்த்தசாரதி

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ஐயா... குறட்பாவில் வாழ்த்தியது மிகுந்த மகிழ்வைத் தருகிறது.

      Delete