மலரும் மனிதநேயம்.
அன்பு நிறைந்த அகத்தினில்
அரும்புமே இரக்கம்!
என்பும் உரியர் பிறர்க்கு என்றாரேஇன்பத் தமிழால்
எம்முப்பாட்டன் வள்ளுவரே!
வாடிய பயிரைக் கண்டு வாடினார் வள்ளலாரே!
முல்லைக்குத் தேர் கொடுத்தான்வள்ளல் பாரியே!
தமையனுக்குத் தலை ஈந்தான் குமணனே!
காக்கை குருவி எங்கள் சாதியென்றேபாட்டு மழை பொழிந்தானே பாரதி!
செம்புலப் பெயல் நீர் போல்அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
அருளிச் சென்றது
அருமைக் குறுந்தொகையே!
புறாவை சிபிச் சக்கரவர்த்தி
காத்ததும்
கருணையின் வடிவமே!
ஆலயங்கள் யாவும் அன்பின் வடிவமே
அதனாலன்றோ
அழகாய்
மலர்கிறது
மனிதநேயம்...
1 Comments
மனித நேயம்
ReplyDelete=============
மனதில் இரக்கம்
மலர்ந்தால் அதுவே
மனிதநேயம்.!
வனமாய்ச் சுரக்கும்
வகையில் நிறைந்தால்
வளமதுவே.!
இனமதற் கில்லை
இதனால் மனதும்
இளகிடவே.!
உனக்குள் எழுச்சி
உணர்வினில் நேயம்
உகந்ததுவே.!
கட்டளைக் கலித்துறை
(அடிதோறும் 17 எழுத்துகள்)
பெருவை கி. பார்த்தசாரதி