தெருவில் நின்று
ஒளிதரும்
இரவு சூரியன்கள்.
முச்சந்தியில் நின்று
ஒளியுமிழும்
முழு நிலாக்கள்.
பல தலைவர்களின்
வாழ்வில் விளக்கேற்றிய
ஒளி விளக்குகள்.
இரவில் மலரும்
மஞ்சள் மலர்கள்.
கிராமத்து வீதிகளின்
அரட்டை அரங்கம்.
இருட்டை விரட்டும்
ஏவல்காரர்கள்.
மின்கம்பத்து வீடு.
3 Comments
வாழ்த்துக்கள்
ReplyDeleteதெருவிளக்கு
ReplyDelete=============
தெருவிளக்கு இல்லையெனில்
............. திண்டாட்டம் உண்டு.!
பெரும்பாலோர் வீட்டில்
............. பிறைவிளக்கு இருக்கும்
இருந்ததுவும் ஓர்க்காலம்
............. இப்போது எங்கும்..
மருந்துக்கும் இல்லையந்த
............. மங்கும் விளக்கெதுவும்.!
தெருவிளக்கு எங்கும்
............. தருமே வெளிச்சம்.!
பொருளும் விளங்கவே
............. பாதை தெரிய..
அருளும் விளக்காய்
............. அகல்விளக்கும் அங்கே
திருவுருக் காணத்
............. திருவருள் கிட்டும்.!
===========================
கலிவிருத்தம் (வெண்டளை)
=========================
கவிஞர் பெருவை பார்த்தசாரதி
மிக்க மகிழ்ச்சி ஐயா. கலிவிருத்தப் பாடல் எளிய சொற்கள் ஏற்றம் பெறுகிறது. நீங்கள் அலைபேசியில் கூறிய அனைத்து கருத்துகளையும் ஆமோதிக்கிறேன். நன்றிகள் ஐயா
ReplyDelete