முன்னாள் குடியரசுத் தலைவர்.
மேதகு அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று...
ஏவுகணை நாயகரே இதயத்தில் வீற்றிருப்பவரே !
மேவிய நாட்டின் மேதகு ஆனவரே!
ராமேஸ்வரத்தில் அவதரித்து ராஸ்ட்ரபதி ஆனவரே.
குழந்தையின் குரலில் தமிழைக்
கொஞ்சும் குணவாளரே. ஆத்திச்சூடியை ஆழ்மனதில் சூடிக் கொண்டவரே.
திருக்குறளை தினம் ஓதும் திருவாளரே.
இளைய தலைமுறையின் இனிய தலைமையே!
நாட்டைப் பற்றியே நாள்தோறும் நினைத்தவரே.
இலட்சியக் கனவு காண இளைஞர்களை ஏற்றிவிட்டவரே.
இந்தியா வல்லரசாக இலக்கு அமைத்தவரே...
உயிர் நீத்தாளும்
எமதுள்ளத்தில் வாழும் உயிர்
உமது நினைவுகளே...
துயரிலும்
நீங்காத நினைவுகளுடன்...
அந்தியூர் மைந்தன் மா.செங்கோடன்
0 Comments