சென்னை,
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார். 8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 12 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
"பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்று, துப்பாக்கிசுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற சாதனையைப் புரிந்துள்ள மனு பாக்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்."
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
from Tamil News | Latest Breaking News Tamil | Today Tamil News Paper - தினத்தந்தி https://ift.tt/sYTVgMb
via IFTTT
0 Comments