அன்பு விதைகளை
அள்ளி அள்ளி விதைத்திடுவோம்!
பண்பு விதைகளைப்
பாடிப் பாடி விதைத்திடுவோம்!
இறை குணமாம் இரக்கத்தை
இதயங்களில் விதைத்திடுவோம்!
ஈந்து மகிழும் ஈகையை
இனிதாய் விதைத்திடுவோம்
உண்மை நாற்றுகளை
உள்ளத்தே ஊன்றி வைப்போம்.
உள்ளத்து வயலை
ஒழுக்கமாய் உழுது வைப்போம்.
நன்றி நவிலும் நல்லெண்ணத்தை
நானிலத்தில் விதைத்திடுவோம்.
முயற்சி என்னும் மூலதனத்தை
முழுமூச்சாய் விதைத்திடுவோம்.
பெற்றோரைப் பேணும் பெருமைதனை
பேரளவில் விதைத்திடுவோம்.
உழைப்பெனும் உன்னதத்தை
உலகெங்கும் விதைத்திடுவோம்.
படிப்பெனும் செல்வத்தைப்
பார் முழுதும் விதைத்திடுவோம்.
விதைக்கும் வேலையை
வீரியமாய் விதைத்திடுவோம்.
0 Comments