தாய்மொழி


 
மொழிகளில் சிறந்தமொழி தாய்மொழி அம்மொழி
மொழிகளில் எல்லாம் தலை.

அயல்நாட்டு மொழிகள் படி
யாரும் வெறுக்கவில்லை.

இந்திய மொழிகள் படி
யாரும் நிந்திக்கவில்லை.

தாய்மொழியை தவறாமல் படி
யாருக்கும் தோல்வியில்லை.

தாய்மொழி உன் சுவாசம்
பெற்றுக்கொள்.

தாய்மொழி உன் ஆலயம்
தொழுதுகொள்.

தாய்மொழி உன் வம்சம்
வளர்த்துக்கொள்.

தாய்மொழி உன் மகுடம்
சூடிக்கொள்.

தாய்மொழி உன் ராஜ்ஜியம்
ஆட்சிகொள்.

தாய்மொழி உன் வானம்
வசப்படுத்திக்கொள்.

தாய்மொழி உன் சிறகு
விரித்துக்கொள்.

தாய்மொழி உன் பாக்கியம்
விதைத்துக்கொள்.

தாய்மொழி உன் சொர்க்கம்
அனுபவித்துக்கொள்.

தாய்மொழி உன் பெருமை
சிறப்பித்துக்கொள்.

தாய்மொழி உன் சிந்தனை
தெளிவாக்கிக்கொள்.

தாய்மொழி உன் புதையல்
பெருக்கிக்கொள்.

தாய்மொழி உன் பெட்டகம்
பாதுகாத்துக்கொள்.

தாய்மொழியை சுவாசிப்போம்.
தாய்மொழியை நேசிப்போம்.
தாய்மொழியை வளர்ப்போம்.

 

Post a Comment

0 Comments