ஓரருவிக் குளியல
உல்லாசம் தருமே!
ஐந்தருவிக் குளியல்
ஐந்தருவியின் அழகை
ஐம்புலன்கள் அறியுமே!
வளைந்தோடும் வனப்பு
விழிகளுக்கு விருந்தே!
தவழ்ந்தோடும் மொழி
செவிக்கு விருந்தே!
முகிழ்ந்த மலர்கள்
நாசிக்கு மருந்தே!
அருந்தும் அருவியில்
அங்கம் மோதினில்
ஆனந்தம் மிளிருமே!
குற்றால அருவிகளைக்
சற்றே சாயல் பெறுகிறேன்
நானும் திரிகூட ராசப்பராய்!
இயற்கையை ரசித்து
இன்பமடைவோம்.
வாழ்க்கைப் பயணத்தில்
வழியெங்கும் இவ்வி(த்)தையை
விதைத்து வைப்போம்.
0 Comments