சென்னை,
"குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் புகழ். தொடர்ந்து, பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். சிக்ஸர் , கைதி , காக்டெயில் , சபாபதி , என்ன சொல்ல போகிறாய் என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். காமெடியனாக மட்டும் இல்லாமல் தற்போது புதிய முயற்சியாக கோலிசோடா ரைசிங் இணையத் தொடரில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை அவரின் இல்லத்தில் வைத்து நேரில் சந்தித்துள்ளார் புகழ். இதனைத் தெரியப்படுத்த அவர் வெளியிட்ட பதிவில், "ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு தலைவரை நேரில் பார்ப்பது. அப்படி எனக்கு கிடைத்த தருணத்தில், அவ்வளவு இயல்பாகவும், எளிமையாகவும் பேசி பழகினார். மக்கள் அவரை எவ்வளவு உச்சத்தில் வைத்தாலும் அதனை தன் தலையில் கூட ஏற்றிக் கொள்ளாத மனிதர். அதனாலேயே அவர் என்றும் சூப்பர் ஸ்டார்.." எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/1YagXRw
via IFTTT
0 Comments