செய்திகள்

டெல்லி,

உலகம் முழுவதும் கிறிஸ்தவ மத பண்டிகையான கிறிஸ்துமஸ் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர்.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி ஜெர்மனி நாட்டின் சண்டோனி அன்ஹட் மாகாணம் மக்டக்பெர்க் நகரின் மையப்பகுதியில் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சந்தையில் நேற்று இரவு குவிந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான கேக், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டிருதனர்.

அப்போது அங்கு வேகமாக வந்த கார் சந்தைக்குள் புகுந்தது. சந்தையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது. இந்த கோர சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்தியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தித்தனர். மேலும், கார் விபத்தை ஏற்படுத்திய சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டரை கைது செய்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜெர்மனியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மனி நாட்டின் சண்டோனி அன்ஹட் மாகாணம் மக்டக்பெர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Latest Tamil News Online | Today News Headlines in Tamil | தமிழ் செய்தி | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/Iet8zmN
via IFTTT

Post a Comment

0 Comments