செய்திகள்

புனே,

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 42-32 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 47-30 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.



from Latest Tamil News Online | Today News Headlines in Tamil | தமிழ் செய்தி | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/VQ9cKNh
via IFTTT

Post a Comment

0 Comments