முத்துக்குமரன்.
தமிழ் சூடிக்கொண்ட மணிமகுடத்தில்
மற்றொரு முத்து.
தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு என்று தமிழை உச்சரித்து
உச்சத்திற்கு சென்ற தலைமகன்.
விளம்பரங்களினால் வீழ்த்த முடியாத விவேகன்.
பளபளக்கும் நட்சத்திரங்களுக்கு இடையில் குன்றலிட்ட
விளக்காய் கோப்பையை வென்ற கோமகன்.
அளவாய் அருந்தமிழை அழகுபடுத்திய ஓவியன்.
ஒருசில சுற்றுப்போட்டிகளில் ஒளிர்விதை விட
ஒருநூறு நாட்கள் ஓய்வில்லாதப் போராட்டங்களில்
துருதுருவென துள்ளி குதித்துத் துவளாமல்
விறுவிறுவென வென்று காட்டிய வேந்தன்.
மூத்தோர் பலபேர் முனைப்பாய் இருந்தும்
வாத்தியார் போல வசனங்கள் பேசி
கூரிய அறிவினால் கூட்டத்தில் சிறந்து
வீரியமாய் வெற்றிக் கோப்பை ஏந்தியவன்
தமிழால் உயர்ந்து தமிழை உயர்த்தி
தமிழின் நிலையைத் தரணியில் நாட்டிய
முத்துக் குமரனை முத்தாய்ப்பாய் வாழ்த்தியே
வித்தாகக் காப்போம் விதைத்து.
0 Comments