சென்னை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள இங்கிலாந்து அணி தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து நடைபெற உள்ள 3-வது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.
இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான ஹாரி புரூக், வருண் சக்கரவர்த்தியின் சுழலுக்கு எதிராக 2 போட்டிகளிலும் ஆட்டமிழந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தார். முன்னதாக ஹாரி புரூக் முதல் போட்டி நடைபெற்ற கொல்கத்தா மைதானத்தில் புகை மூட்டமாக இருந்ததால் பந்தை பார்க்க முடியவில்லை என்று கூறி இருந்தார். இருப்பினும் சென்னையில் நடைபெற்ற போட்டியி; அவர் பந்தை கணிக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் அவரது கருத்திற்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சென்னையை சேர்ந்த அஸ்வின் வருண் சக்கரவர்த்தியின் சுழலுக்கு எதிராக ஹாரி புரூக்கின் தவறை சுட்டிக்காண்பித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சென்னையில் எந்த புகை மூட்டம் இல்லை. வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை அடித்து ஆடுவது உண்மையிலேயே அவருக்கு சிரமமாக இருந்தது. நான் புரூக்கிற்கு ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வருண் சக்கரவர்த்தியால் லெக் ஸ்பின் வீச முடியாது அவர் வீசுவது கூக்ளி. அவர் வீசும் பந்தை நீங்கள் கைகளில் இருந்து எப்படி வருகிறது என்பதை பார்க்கவில்லை. அதேபோன்று அவர் பந்தை உங்களால் கணிக்க முடியவில்லை. ஸ்டம்பை மறைத்துக்கொண்டு நின்று பெரிய ஷாட் ஆட முயன்றீர்கள். அதனால்தான் ஆட்டமிழந்தீர்கள். வருண் சக்கரவர்த்தி போன்ற ஒரு சுழற்பந்துவீச்சாளரை எதிர்த்து ஆடும்போது சரியான இடத்தில் நின்று பந்தையும் முறையாக பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News | Online Tamil News | News In Tamil | Live Tamil News - Daily Thanthi | Tamil News Paper https://ift.tt/GIBaREC
via IFTTT
0 Comments