கொல்கத்தா,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் ஒரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து நடைபெற்ற பிற்பாதி ஆட்டத்தில் மோகன் பகான் ஒரு கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றது. மோகன் பகான் தரப்பில் லிஸ்டன் கோலாகோ வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார்.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் மோகன் பகான், கோவா, பெங்களூரு மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன.
from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News | Online Tamil News | News In Tamil | Live Tamil News - Daily Thanthi | Tamil News Paper https://ift.tt/HYGZdJS
via IFTTT
0 Comments