செய்திகள்

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அரிடதுபலம் பகுதியில் இன்று தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

அரிடதுபலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதியது. பின்னர், சாலை தடுப்பு சுவரில் மோதிய பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த பயணிகள் 50 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News | Online Tamil News | News In Tamil | Live Tamil News - Daily Thanthi | Tamil News Paper | Breaking Tamil news https://ift.tt/b2MAYD5
via IFTTT

Post a Comment

0 Comments