சாதனையாளனின் பாதை.



சாதனையாளனின் பாதை.
 

எழுந்து நட...
விழிகளைத் திற...
வழிகளைத் தேடு..
விவேகத்தைக் கூட்டு...
வேகத்தைக் காட்டு.
திட்டங்கள் தீட்டு
தீர்க்கமாய் முடிவெடு.
எல்லைகளை நீட்டு…
இறகுகளை விரி…
தானாய்க் கிடைக்கும் வழிகள்.
வழிகாட்டிட வருமே ஒளிகள்.
ஒளிநோக்கி ஓடுமே விழிகள்..
விழிகள் காட்டும் பாதையில்
விரைந்திடு
தடைகள் உடையும்…
விடைகள் கிடைக்கும்...
சாதனையாளனின் பாதை
சரித்திரமாவது இவ்வாறே…
உன் பாதை சந்ததிகளுக்குப்
பாடமாகட்டும்.


அந்தியூர் மைந்தன் மா.செங்கோடன்


 

Post a Comment

0 Comments