பூவையர்
பூவையர் கரங்களில்
பூச்சரங்கள்
தெருவோரங்களில் பூத்த
பூங்காக்கள்.
பெண் வியாபாரிகள் செய்யும்
வர்த்தகங்கள்
வாடிடும் முன்னே
விற்றுவிட நினைக்கும்
ஏழை வியாபாரிகள்.
நாரையும் மணக்க வைக்கும் நறுமலர்கள்.
கூட்டுக் குடும்பமாகும்
கதம்ப மலர்கள்.
மலர்களைப் போலவே
இவர்களது வாழ்க்கையும்
மணம் வீசட்டும்.
அந்தியூர் மைந்தன் மா.செங்கோடன்
0 Comments