செய்திகள்

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது;

வட மொழியில் வால்மீகி எழுதிய கம்பராமாயணத்தில் சீதையை தூக்கிச் சென்றார் என எழுதியிருப்பார்.ஆனால், இங்கே கம்பர் பெண்களை கண்ணியத்துடன் எழுதி இருப்பார். இந்த ஊரில் உயர் பொறுப்பில் இருக்கும் நபர் பெண்களை மிகவும் மோசமாக பேசியுள்ளார். அது மிகவும் கண்டனத்திற்குரியது.

அவரை நான் மரியாதைக் குறைவாக பேச மாட்டேன்,இவர்கள் சிவ, விஷ்ணு பக்தர்களின் நம்பிக்கையை காலில் போட்டு மிதிக்கும் விதமாக பேசியுள்ளார். மலேரியா, டெங்கு கொசு-க்கு இணையாக சனாதனத்தை கூறியவர்களிடமிருந்து என்ன எதிர்பார்ப்பது. கம்பர் பாடத்தை கல்விச் சாலைக்குள் ஒரு பாடமாக படிக்க தேவை உருவாக்க வேண்டும். இதுவே கம்பருக்கு நாம் செய்யும் அஞ்சலி"

இவ்வாறு கவர்னர் ஆர். என். ரவி பேசினார்.  



from DailyThanthi: Tamil News | Today News in Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | Tamil News Online https://ift.tt/fCtanXb
via IFTTT

Post a Comment

0 Comments