செய்திகள்

மலையாள திரை உலகில் தனது 45 வருட திரையுலக பயணத்தில் தற்போது வரை முதல் இடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவரது நடிப்பில் சமீபத்தில் எல்2 எம்புரான், தொடரும் ஆகிய படங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது கண்ணப்பா, விருஷபா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், நடிகர் மோகன்லால் நேற்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரை உலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் மோகன்லாலின் 47 வருட சினிமா வாழ்க்கை புத்தகமாக உருவாக்கப்படுகிறது. இதுபற்றி அவர் கூறுகையில், "அன்புள்ள நண்பர்களே எனது பிறந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பானுபிரகாஷ் எழுதிய எனது வாழ்க்கை வரலாற்றின் முன்னுரையை எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி இருக்கிறார்.

கடந்த 47 வருடங்களாக நீடித்த எனது நடிப்பு வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை குறிக்கும் புத்தகம் இது. பல வருடங்களாக என்னுடன் பயணித்து என் வாழ்க்கையை கடிதங்களாக பதிவு செய்து வரும் எழுத்தாளர் பானுபிரகாஷ் முயற்சியால் இது சாத்தியமானது. சுமார் 1000 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் டிசம்பர் 25-ந்தேதி வெளியாகும். இது எனது திரைப்பட வாழ்க்கையின் 47 ஆண்டுகளை நிறைவு செய்யும். நன்றி" இவ்வாறு அவர் கூறினார்.



from தினத்தந்தி தமிழ் செய்திகள்: Tamil News, Latest Tamil News, Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/XwlSVmn
via IFTTT

Post a Comment

0 Comments