
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 235 ரன்கள் குவித்துள்ளது. நிக்கோலஸ் பூரன் 56 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதனையடுத்து 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் களமிறங்கியது. இமாலய இலக்கு என்பதால் எளிதாக வென்று விடலாம் என நினைத்த லக்னோ அணிக்கு பயத்தை காட்டியது குஜராத் அணி. துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் ( 21 ரன்கள்), சுப்மன் கில் (35), ஜோஸ் பட்லர் ( 33) என சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஷாருக்கான் அதிரடி காட்டினார்.
இதனால், ஒரு கட்டத்தில் குஜராத் அணிக்கு சாதகமாக ஆட்டத்தின் போக்கு மாறுவது போல இருந்தது. எனினும், மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. இதனால், ரன் ரேட் எகிற தொடங்கியது. குஜராத் அணிக்கு நம்பிக்கை கொடுத்து வந்த ஷாருக்கானும் 57 ரன்களில் அவுட் ஆனார். இதனால், குஜராத் அணியின் வெற்றி கனவு தகர்ந்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 202 மட்டுமே குஜராத் அணி எடுத்தது. இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. பிளே ஆப் சுற்றில் வெளியேறியுள்ள லக்னோ அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.
13 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 13 போட்டிகள் விளையாடியுள்ள லக்னோ அணி பெற்ற 6-வத் தோல்வி இதுவாகும். நாளை நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞர்ஸ் பெங்களூர் அணியும் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
from தினத்தந்தி தமிழ் செய்திகள்: Tamil News, Latest Tamil News, Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/Oh3N8QM
via IFTTT
0 Comments