
சென்னை,
இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் ஆகும். புனித மெக்காவுக்குச் சென்று வர சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல விரும்புவார்கள். இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் இந்தக் கடமை நிறைவேறுகிறது.
அதே நாளில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். ஹஜ் கடமை நிறைவேறுவதால் இது 'ஹஜ்ஜுப் பெருநாள்' என்றும், இறைவனின் கட்டளைக்கு ஏற்ப தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்துப் பலியிட முயன்ற நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் 'தியாகத் திருநாள்' என்றும் அழைக்கப்படுகிறது.
'துல்ஹஜ் மாத பிறை நேற்று (28-ந் தேதி) தென்பட்டதைத் தொடர்ந்து பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 7-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும்' என்று தமிழக அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவித்துள்ளது. இதே தகவலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில தலைமை ஹாஜி தாவூத் கைஸரும் வெளியிட்டுள்ளார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/mJEGOnd
via IFTTT
0 Comments