
லண்டன்,
விமானங்களில் செல்லும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதற்கு விமானங்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
எனவே விமான நிலையம் மற்றும் விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு சுமார் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான ரியானேர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/MHLtrqa
via IFTTT
0 Comments