
பீஜிங்,
ஆமதாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து ெநாறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உள்பட சுமார் 265 பேர் கொல்லப்பட்டனர். உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்து தொடர்பாக சர்வதேச தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு உள்ளனர். அந்தவகையில் சீன அதிபர் ஜின்பிங்கும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தனது அனுதாபத்தை தெரிவித்து இருக்கிறார். அவர் தனது இரங்கல் செய்தியில், 'விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீன அரசு மற்றும் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் வாழ்த்துகிறேன்' என கூறியுள்ளார். மேலும் சீன பிரதமர் லி கியாங்கும் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/o9u3Fmd
via IFTTT
0 Comments