
சென்னை,
சென்னை வடபழனி பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ் (28). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சரஸ்வதி (23) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று இரவு சுரேஷ் தனது மனைவி குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த போது மனைவி சரஸ்வதி எழுந்து வந்து நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சரஸ்வதி சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து ஓடிவந்த சுரேஷ் பலத்த காயம் அடைந்த சரஸ்வதியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தலை, கை, கால் பகுதியில் பலத்த காயமடைந்த சரஸ்வதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வடபழனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் பேரில் போலீசார் விரைந்து சென்று சரஸ்வதி கணவரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சரஸ்வதி கடந்த சில நாட்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும், தற்போது 2 மாதம் கர்ப்பிணியாக உள்ள அவர் நேற்று இரவு கணவர் தூங்கிய பின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனை அடுத்து வடபழனி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/IFRjuPe
via IFTTT
0 Comments