
கயானா,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் டி20 தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷாய் ஹோப் (கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, ஷிம்ரன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ரோவ்மன் பவல், ஆண்ட்ரே ரசல், ஷெர்பேன் ரூதர்போர்டு, ரொமாரியோ ஷெப்பர்டு.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:
ஷாய் ஹோப் ( கேப்டன்), கீசி கார்டி, ஜான்சன் சார்ல்ஸ், மேத்யூ போர்டு, ஜிட் கூலி, ஷிம்ரன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ரோவ்மன் பவல், ஷெர்பேன் ரூதர்போர்டு, ரொமாரியோ ஷெப்பர்டு.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/BnKN07e
via IFTTT
0 Comments