திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் எட்வின் அருள்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்குளம் ரயில்வே கேட் அருகே சந்தேகப்படும்படி, மினி லாரியில் வந்த கடம்போடுவாழ்வு, சுப்பிரமணியபுரம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது 54) என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக ஜல்லி கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, உரிய அனுமதியில்லாமல் ஜல்லி கற்களை ஏற்றி வந்த வேல்முருகனை இன்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 1½ யூனிட் ஜல்லி கற்களையும், ஒரு மினி லாரியையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/eL7wZj5
via IFTTT
0 Comments