செய்திகள்

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது. நாளை அதிகாலை 5:25 மணி முதல் 6.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கோவில் குடமுழுக்கு நடைபெற்றப்பின் காலை 7.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாளையும் (14ம் தேதி), நாளை மறுதினமும் (15ம் தேதி) கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/V4tk3lJ
via IFTTT

Post a Comment

0 Comments