செய்திகள்

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சிறிய ரக விமானம் நெதர்லாந்து புறப்பட்டது.

இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானம் தீப்பற்றி ஏரிந்து வெடித்து சிதறியது.

இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார், தீயணைப்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானத்தில் பயணித்தது எத்தனைபேர்? , விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டதா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/T7F5Og1
via IFTTT

Post a Comment

0 Comments