காஞ்சீபுரம்,
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாதம் தொடங்கிய நிலையில், ஆண்டாள் நாச்சியார் திருமண கோலம் கண்டருளும் ஆடிப்பூர உற்சவம் இன்று முதல் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, வெங்காய நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மலர் மாலைகள் சூட்டி, சிறப்பு அலங்காரத்தில், மேள தாள வாத்தியங்கள் முழங்க வேதபாராயண கோஷ்டியினர் பாடி வர சன்னதி வீதியில் ஊர்வலமாக சென்று திருவடி கோவிலில் சேவை சாதித்தார்.
பின்னர் கோவிலுக்கு திரும்பிய ஆண்டாள் நாச்சியாருக்கு கற்பூர தீபாராதனை காட்டியதை தொடர்ந்து சன்னதிக்கு எழுந்தருளி பக்தர்கள் முன்னிலையில் ஊஞ்சல் சேவை கண்டருளினார். ஆடிப்பூர உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் நாச்சியாரை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர். முக்கிய உற்சவமான ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/hDoieZw
via IFTTT
0 Comments