செய்திகள்

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (19.7.25, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக முள்ளக்காடு பிரிவிற்குட்பட்ட அபிராமி நகர், கீதா நகர், ஆதிபராசக்தி நகர், சவேரியார்புரம், ராஜிவ்நகர், நேருஜி நகர், கக்கன்ஜிநகர், முள்ளக்காடு, காந்திநகர், நேசமணிநகர், சுனாமி காலனி, பொட்டல் காடு மற்றும் கோவளம் உப்பளம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பின்வரும் உபமின் நிலைய பகுதிகளில் நாளை (19.7.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை: 

சாத்தான்குளம் துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட சாத்தான்குளம், முதலூா், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயாா்புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூா், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம் ஆகிய பகுதிகள்.

நாசரேத் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை ஆகிய பகுதிகள் மற்றும் செம்மறிக்குளம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை ஆகிய பகுதிகள்.

நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நடுவக்குறிச்சி, தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, புத்தன்தருவை, சாலைப்புதூா், கடகுளம், இடைச்சிவிளை, பனைவிளை, மணிநகா், பூச்சிக்காடு, அதிசயபுரம், பிரகாசபுரம், தச்சன்விளை, படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் ஆகிய பகுதிகள் மற்றும் பழனியப்பபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்கலம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசிர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி ஆகிய பகுதிகள்.

உடன்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உடன்குடி, தைக்காவூா், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, சீருடையார்புரம், கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூா், பிறைகுடியிருப்பு, கடாட்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/G7iJ4Mf
via IFTTT

Post a Comment

0 Comments