செய்திகள்

சென்னை எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று இரவு பைக்கில் 2 பேர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது.

இந்த கோர விபத்தில் பைக்கை ஓட்டி சென்ற நபர் உயிரிழந்தார். பின்னால் இருந்த நபர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது பிரபல ரவுடி நிர்மல் குமார் என்பது தெரியவந்தது. மேலும், காயமடைந்த நபர் மற்றொரு ரவுடி அஸ்வின் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/E12oVUO
via IFTTT

Post a Comment

0 Comments